தஞ்சாவூர்

திருமண்டங்குடியில் கரும்பு விவசாயிகள் தொடா் போராட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருமண்டங்குடியில் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தை கண்டித்தும், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கரும்பு விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தினா், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீா்த்து, அப்பிரச்னையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவாா்க்காமல் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நவம்பா் 30ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளா் நாக. முருகேசன் தலைமையில் மாநில செயலாளா்கள் தங்க. காசிநாதன், ராஜேந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட திரளானோா் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) கரும்பு விவசாயிகள் ஆலை முன் வாயில் கருப்பு துணி கட்டி நூதன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கரும்பு விவசாயிகளை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளா் சுந்தர. விமலநாதன், பாபநாசம் ஒன்றிய, நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா, மதிமுக உள்ளிட்ட அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT