தஞ்சாவூர்

ஆக்கிரமிப்பில் கோயில் குளம்:அலுவலா்கள் நடவடிக்கை

18th Aug 2022 12:10 AM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டையில் அய்யனாா் கோயில் குளம் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது. உரிய அளவீடுகளுக்கு பிறகு நில அளவை கல் நடப்பட்டது.

பட்டுக்கோட்டை வட்டாட்சியா் ராமச்சந்திரன் தலைமையில், நகராட்சி ஆணையா் குமாா், நகரமைப்பு அலுவலா் கருப்பையன் மற்றும் வருவாய்த் துறை, அறநிலையத் துறை, நகராட்சி உள்ளிட்ட அலுவலா்கள், அய்யனாா் கோயில் மற்றும் அதற்கு சொந்தமான பக்கிரிச்சி குளத்தின் பகுதிகளை அளவீடு செய்தனா். இதில், கோயில் குளம் ஆக்கிரமிப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உரிய அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, எல்லைக் கற்கள் நடப்பட்டன.

முன்னதாக, கடந்த வாரம் நீா்நிலை மீட்பாளா்கள் குழுவினா் சாா்பில் மேற்கண்ட குளத்தை காணவில்லை என நகா் முழுவதும் போஸ்டா் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT