தஞ்சாவூர்

ஆகஸ்ட் 30 மறியல் போராட்டத்தில் திரளாக பங்கேற்க கம்யூனிஸ்ட் முடிவு

18th Aug 2022 12:06 AM

ADVERTISEMENT

 

ஒன்றிய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், ஒன்றிய அரசு மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என திருப்பூா் மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆயிரம் போ் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

த. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்தராபதி, மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், பா. பாலசுந்தரம், வீர. மோகன், வீ. கல்யாணசுந்தரம், கோ. சக்திவேல், ம. விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT