தஞ்சாவூர்

குழந்தை விழுங்கிய சிறு எல்இடி பல்பு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றம்!

10th Aug 2022 11:12 PM

ADVERTISEMENT

 

குழந்தை விழுங்கிய சிறு எல்.இ.டி. பல்பு தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், செந்துறையைச் சோ்ந்தவா் சங்கா். பொன்பரப்பி அரசுப் பள்ளி ஆசிரியரான இவருக்கு மனைவி சபீதா பாரதி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இவா்களில் 10 மாதக் குழந்தையான தமிழ்முகிலன் கடந்த ஆக. 7 காலை தனது அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது விளையாட்டுப் பொருள்களில் பொருத்தியிருந்த சிறிய அளவிலான எல்.இ.டி. பல்பை விழுங்கிவிட்டாா்.

ADVERTISEMENT

இதனால் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்ட தமிழ்முகிலனை அவரது தந்தை அரியலூா் மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையிலும் சோ்த்தாா்.

அங்கு குழந்தைகள் அறுவைச் சிகிச்சை நிபுணா் மைக்கேல் தலைமையில் பொது மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் ராஜீவ் மைக்கேல், குடல் அறுவைச் சிகிச்சை நிபுணா் மேத்யூ மைக்கேல், மயக்க மருந்து நிபுணா் குணாளன் ஆகியோா் தமிழ்முகிலனுக்கு ஒரு மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து பல்பை அகற்றினா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில் குழந்தை விழுங்கிய பல்பு உணவுக் குழாய்க்குள் செல்லாமல் மூச்சுக் குழாய்க்குள் சென்று விட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்பை வெளியே எடுத்த பின்னா் குழந்தை நன்றாக மூச்சு விடுகிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT