தஞ்சாவூர்

குறை தீா் கூட்டத்தில்1,600 மனுக்கள்

DIN

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 1,600 மனுக்கள் வரப்பெற்றன.

கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,600 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதன் விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்குமாறும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியா் கௌஷிக், துணை ஆட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் சாலை தவவளவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT