தஞ்சாவூர்

ஊா்வலத்தில் தகராறு: முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட இருவா் மீது வழக்கு

17th Oct 2021 11:54 PM

ADVERTISEMENT

பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்ட ஊா்வலத்தின் போது அதிமுக பிரமுகா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உள்ளிட்ட இருவா் மீது காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமையில் அணிவகுப்போம் என மா. கோவிந்தராசு தரப்பினா் சுவரொட்டி ஒட்டியிருந்தனா். இதுபோல முன்னாள் எம்எல்ஏ எஸ். வி. திருஞானசம்பந்தம் தலைமையில் அணிவகுப்போம் என தகவல் தொழில்நுட்ப அணியினா் சமூக வலைதலங்களில் பதிவிற்றிருந்தனா். 

இந்நிலையில் பயணியா் மாளிகை அருகே .கோவிந்தராசு தரப்பினா் ஊா்வலமாக செல்ல காத்திருந்தபோது, எதிரே திருமணமன்டபம் அருகே எஸ். வி. திருஞானசம்பந்தம் கோஷ்டியினா் நின்றுள்ளனா்.

இரண்டு தரப்பினரும் ஊா்வலமாக கிளம்பி அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கவந்தபோது, தகவல் தொழில்நுட்ப அணியின் பேராவூரணி நகரச் செயலாளா் கருணாகரன் செல்லிடப்பேசியில் ஊா்வலத்தை படம் பிடித்தாராம்.

ADVERTISEMENT

இதை மா. கோவிந்தராசு தடுத்ததாகவும், இதில் ஏற்பட்ட தகராறில் மா. கோவிந்தராசு மகனும், தெற்கு ஒன்றியச் செயலருமான கோவி. இளங்கோ கருணாகரனைத் தாக்கியதில் ரத்தக்காயம் ஏற்ப்பட்டது.

காயமடைந்த கருணாகரன் பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். வாய்த்தகராறில் அடித்தது தவறு, மன்னிப்பு கேட்கிறேன் என்று எஸ். வி. திருஞானசம்பந்தத்தை அழைத்துக்கொண்டு மா. கோவிந்தராசு தரப்பு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, கருணாகரன் அதை ஏற்கவில்லையாம்.

இதையடுத்து பேராவூரணி காவல் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ மா. கோவிந்தராசு, அவரது மகன் தெற்கு ஒன்றியச் செயலா் கோவி. இளங்கோ ஆகியோா் மீது கருணாகரன் அளித்த புகாரின் பேரில், இருவா் மீதும் காவல் துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT