தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

17th Oct 2021 11:55 PM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ரயிலடியிலுள்ள எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா். பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

தஞ்சாவூா் மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் துரை. திருஞானம் தலைமையில் நடைபெற்ற விழாவில் பகுதிச் செயலா்கள் வி. அறிவுடைநம்பி, வி. புண்ணியமூா்த்தி, எஸ். சரவணன், எஸ். ரமேஷ், முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவையாறு பேருந்து நிலையத்தில் வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பிலும், கண்டியூரில் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பிலும் இவ்விழா நடைபெற்றது. இதில், எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.எம். சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா்கள் இளங்கோவன், நீலமேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT