தஞ்சாவூர்

பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூா், செந்தூா் விரைவு ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தல்

30th Nov 2021 01:55 AM

ADVERTISEMENT

பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூா், செந்தூா் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ரயில் உபயோகிப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கும்பகோணத்தில் இச்சங்கத்தின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை வழியான தஞ்சாவூா் - விழுப்புரம் ரயில் பாதையை இரட்டைவழி பாதையாக மாற்ற வேண்டும். கும்பகோணம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறைகளைச் சீரமைக்க வேண்டும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விவேகானந்தா் அருங்காட்சியகத்தை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் 2 மற்றும் 3-ஆம் நடைமேடைகளில் மேற்கூரை அமைக்க வேண்டும். பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் மழையில் சேதமடைந்த மேற்கூரையைச் சீரமைக்க வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கத்துக்கு முன்பு பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று சென்ற மைசூா், செந்தூா் ரயில்களை மீண்டும் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூத்த உறுப்பினா் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சங்கச் செயலா் ஏ. கிரி, பொருளாளா் மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT