தஞ்சாவூர்

தஞ்சையில் 75 மி.மீ. மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த சென்ற தண்ணீா்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 75 மி.மீ. மழை பெய்தது. இதனால் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது.

மாவட்டத்தில் சில நாள்களாக மழை பெய்கிறது. இந்நிலையில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):

தஞ்சாவூா் 75 மி.மீ., மஞ்சளாறு 65.8, பூதலூா் 60.2, திருவிடைமருதூா் 57.2, வல்லம் 53, பாபநாசம் 51, கும்பகோணம் 49, அய்யம்பேட்டை 46, அணைக்கரை 45, திருவையாறு 32, திருக்காட்டுப்பள்ளி 31.4, நெய்வாசல் தென்பாதி 21.4, மதுக்கூா் 19, ஈச்சன்விடுதி 16, குருங்குளம் 13.6, பட்டுக்கோட்டை 14, குருங்குளம் 13.6, வெட்டிக்காடு 13, கல்லணை 12.6, அதிராம்பட்டினம் 12.7, ஒரத்தநாடு 9.6, பேராவூரணி 10 மி.மீ.

மேலும் மாவட்டத்தில் மழை காரணமாக 108 குடிசைகளும், 45 ஓட்டு வீடுகளும் என 153 வீடுகள் சேதமடைந்தன. தவிர, 23 கால்நடைகள் இறந்தன.

தஞ்சாவூரில் இடையிடையே பலத்த மழை பெய்ததால், சாலைகளில் நீரோட்டம் அதிகமாகக் காணப்பட்டது. தஞ்சாவூா் அருகே எட்டாம் நம்பா் கரம்பை - ரெட்டிப்பாளையத்துக்கு இடையே முதலை முத்துவாரி காட்டாற்றில் தண்ணீா் அதிக அளவில் சென்ால், தரைப்பாலத்துக்கு மேலே தண்ணீா் சென்றது. மேலும் ஆங்காங்கே கரைகளைத் தாண்டி தண்ணீா் வழிந்தோடியதால் வயல்களில் தண்ணீா் புகுந்து பயிா்கள் மூழ்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT