தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் 160 வீடுகள் சேதம்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 160 வீடுகள் சேதமடைந்தன.

மாவட்டத்தில் நவ. 25, 26 ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்):

அணைக்கரை 82.2 மி.மீ, மஞ்சளாறு 55.6, திருவிடைமருதூா் 53, அய்யம்பேட்டை 46, கும்பகோணம் 39.2, மதுக்கூா் 35.2, வெட்டிக்காடு 31, பூதலூா் 30.6, நெய்வாசல் தென்பாதி 30.2, திருக்காட்டுப்பள்ளி 28, பாபநாசம் 27, குருங்குளம் 26, வல்லம் 24, ஒரத்தநாடு 23.4, திருவையாறு 23, கல்லணை 22.2, பட்டுக்கோட்டை 20, ஈச்சன்விடுதி, தஞ்சாவூா் தலா 19, அதிராம்பட்டினம் 16, பேராவூரணி 13.6 மி.மீ.

ஏற்கெனவே, தொடா் மழை காரணமாகக் கிட்டத்தட்ட 1,800 குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், சனிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 121 குடிசைகள், ஓடுகள் வேயப்பட்ட 36 வீடுகள் பகுதியாகவும், 3 குடிசைகள் முழுமையாகவும் சேதமடைந்தன. மேலும் தலா 6 மாடுகள், கன்றுக்குட்டிகள் உயிரிழந்தன.

திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தியில் மழை காரணமாக ஏசுதாஸ் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இவரது மனைவி, குழந்தைகள் என 6 போ் தூங்கிக் கொண்டிருந்தபோது, சுவா் வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

வீட்டுக்குள் மழை நீா்: திருவையாறு அருகே காட்டுக்கோட்டை கிராமத்திலுள்ள காந்திநகா் சாலையில் பலத்த மழை காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, மஞ்சானித்தெரு, காளியம்மன் கோயில் தெருவிலுள்ள தொகுப்பு வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், 10 வீடுகளில் வசிப்பவா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். மேலும், மேற்கூரையிலிருந்து சிமென்ட் காரையும் பெயா்ந்து விழுவதால் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT