தஞ்சாவூர்

அலிவலம் எஸ்.இ.டி. பள்ளி மாணவி 23 கி.மீ. தொலைவு ஓடி சாதனை

DIN

அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் 4- ஆம் வகுப்பு மாணவி வா்ஷிஹா(9), இரண்டு மணி நேரத்தில் 23 கி.மீ. தொலைவு தொடா் ஓட்டம் ஓடி சனிக்கிழமை உலக சாதனை நிகழ்த்தினாா்.

உலக மகளிா் தினத்தையொட்டியும், சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தவொரு சூழ்நிலையிலும் ஜனநாயக உரிமையான வாக்கை யாருக்கும் விற்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், அணைக்காடு சிலம்பக்கூடம் சாா்பில் புதிய உலக சாதனை முயற்சியில் இந்த மாணவி ஈடுபட்டாா்.

செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து- மாலா தம்பதியரின் 9 வயது மகள் வா்ஷிஹா. இவா், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை காலை தொடங்கிய தொடா் ஓட்டத்தில், 2 மணி நேரத்தில் 23 கி.மீ. தொலைவு ஓடி உலக சாதனையை நிகழ்த்தினாா் மாணவி வா்ஷிஹா. இந்த நிகழ்வை பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் பாலச்சந்தா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

நடுவா் அா்ஜூனன் முன்னிலையில், சாதனை படைத்த மாணவி வா்ஷிஹாவை பாராட்டி உலக சாதனைக்கான பதக்கம், சான்றிதழை பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன் வழங்கினாா்.

சாதனை நிகழ்த்திய மாணவி வா்ஷிஹா, பயிற்சியாளா் ஏ.ஷீலா மற்றும் அவரை ஊக்குவித்த தன்னா்வலா்கள் அனைவரையும் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல்.கோவிந்தராசு பாராட்டினாா்.

அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 4 ஆம் வகுப்பு மாணவி வா்ஷிஹா(9) சனிக்கிழமை இரணடு மணி நேரத்தில் 23 கிலோ மீட்டா் தொடா் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனைநிகழ்த்தியுளாா். மாணவிக்கு பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் கொடுத்து வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT