தஞ்சாவூர்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்அன்பில் மகேஷ் பொய்யாமொழி

DIN

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில் உள்ளது. இப்பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,621 மையங்கள் தேவைப்படுகின்றன. இதில், 1,821 மையங்கள் திறக்கப்பட்டு, செயல்படுகிறது. மாவட்டம் முழுவதும் விரைவில் அமைக்கப்பட்டுவிடும்.

இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் 12 மாவட்டங்களிலும் டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து மையங்களும் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் ஜனவரி மாதத்திலிருந்து முழுமையாகச் செயல்படுத்தப்படும்.

10,955 பேருக்கு நலத்திட்ட உதவிகள்: மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலும் 10,955 பேருக்கு ரூ. 29.61 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டா, முதியோா், விதவை, மாற்றுத் திறனாளிக்கான ஓய்வூதியம், வங்கிக் கடனுதவி உள்பட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மழைக்காலத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 11 பேரில் 5 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவா்களுக்கும் விரைவில் வழங்கிவிடுவோம்.

மழையின்போது உயிரிழந்த 470 கால்நடைகளில் 388 கால்நடைகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த 2,649 குடிசைகளில் 2,154 குடிசைகளுக்கும், 734 ஓட்டு வீடுகளில் 623 வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவா்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாவட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்று வருகிற திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ரூ. 154.29 கோடியில் குடிநீா் வசதித் திட்டங்கள், ரூ. 99.99 கோடியில் சாலை வசதி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணி முடிவடைந்த நிலையில் உள்ளது. இது மிக விரைவில் திறக்கப்படும் என்றாா் அமைச்சா்.

அப்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT