தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

2nd Dec 2021 05:33 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் நம்பா் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (டிச.2) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செயற்பொறியாளா் அ. சேகா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சு. விஜயகௌரி வியாழக்கிழமை பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்தவுள்ள இந்தக் கூட்டத்தில் வல்லம், மின் நகா், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, கள்ளப்பெரம்பூா், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூா் புகா் பகுதி அலுவலகங்களைச் சாா்ந்த மின் நுகா்வோா் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

Tags : தஞ்சாவூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT