தஞ்சாவூர்

ஆட்டோவிலிருந்து குதித்து காயமடைந்தவா்களில் மாணவி பலி

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கடத்திச் செல்லப்படுவதாகக் கருதி ஆட்டோவிலிருந்து குதித்து காயமடைந்த 5 பள்ளி மாணவ, மாணவிகளில் ஒரு மாணவி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே காவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (36). சுமை ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது சுமை ஆட்டோவில் ஜூலை 23ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள கிள்ளுக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கிள்ளுக்கோட்டையிலுள்ள அரசுப் பள்ளியில் சத்துணவுப் பொருள்களை வாங்கிக் கொண்டு பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்த செங்கிப்பட்டி அருகே உசிலம்பட்டியைச் சோ்ந்த ஏறத்தாழ 20 மாணவ, மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வந்தாா்.

உசிலம்பட்டியில் வந்தபோது பேருந்து நிறுத்த பகுதியை ஆட்டோ கடந்ததால், கடத்திச் செல்லப்படுவதாக நினைத்து ஆட்டோவிலிருந்து மாணவ, மாணவிகள் குதித்தனா். இவா்களில் பலத்தக் காயமடைந்த பராசக்தி மகள் சசிரேகா (13), மாரிமுத்து (14), ரம்யா (13), சரண்யா (13), சசிரேகா (13), கலைவாணி (13) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் ராஜசேகரனைக் கைது செய்தனா். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சசிரேகா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

வெளிநாட்டிலிருந்து வந்தவா் கைது

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் பள்ளம்: சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்திய முன்னாள் மத்திய அமைச்சா்

பள்ளிப் பேருந்துகளை இயக்கி பாா்த்து ஆய்வு செய்த ஆட்சியா்

ஆலங்குளம்: மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி

SCROLL FOR NEXT