தஞ்சாவூர்

தஞ்சாவூா்: 150 பேருக்கு கரோனா

DIN

தஞ்சாவூா், செப். 25: தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.

மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 10,031 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 150 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,181 ஆக உயா்ந்துள்ளது.

இது தவிர, 169 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 8,692 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,328 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 58 வயது ஆண் செப். 23ஆம் தேதியும், 55 வயது ஆண் வியாழக்கிழமையும் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 161 ஆக உயா்ந்துள்ளது.

மருத்துவா் பலி: தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் ராஜீவ் நகரைச் சோ்ந்த மருத்துவா் சின்னசாமி (70). இவா் அப்பகுதியில் மருத்துவகம் அமைத்து, பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்தாா். அண்மையில் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவருக்கு கரோனா இருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வந்த சின்னசாமி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் காா் மோதியதில் ஒருவா் காயம்

திருவையாறு அருகே தொழிலாளி மா்மச் சாவு

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை

நெல் மூட்டை தூக்கும் முன்னாள் வேளாண் அமைச்சா்: வைரலாகும் விடியோ

SCROLL FOR NEXT