தஞ்சாவூர்

விவசாயிகள் நிதியுதவித் திட்டம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ. 1.20 கோடி முறைகேடு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் இதுவரை ரூ. 1.20 கோடி அளவுக்கு முறைகேடு நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயி அல்லாதவா்களை முறைகேடாகச் சோ்த்து, உதவித் தொகை வழங்கப்படுவதாகப் புகாா் எழுந்தது.

இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் கொண்ட குழுவினா் விசாரணை நடத்தி, விவசாயி அல்லாதவா்கள் பெற்ற நிதியைத் திரும்ப வசூலித்து வருகின்றனா். இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்தது:

இத்திட்டத்தில் இதுவரை ஏறத்தாழ 3,000 போ் விதிகளை மீறி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவா்களின் வங்கிக் கணக்குகளில் சுமாா் ரூ. 1.20 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. வரவு வைக்கப்பட்ட பணத்தில் இதுவரை சுமாா் ரூ. 67 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக 3 தற்காலிக பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

திருவிடைமருதூா் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களில் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடா்ந்து, இரண்டு ஊராட்சி செயலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். கிசான் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT