தஞ்சாவூர்

கும்பகோணம் அருகேவீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

DIN

கும்பகோணம் அருகேயுள்ள பட்டீசுவரம் முழையூா் முதன்மைச் சாலை பகவதி அம்மன் கோயில் எதிரே வசிப்பவா் ரவிச்சந்திரன் (62). சொந்தமாக காா், ஆட்டோ வைத்து டிராவல்ஸ் நடத்துகிறாா். இவரது மனைவி உமைய பாா்வதி (60). ஓய்வு பெற்ற செவிலியா்.

ரவிச்சந்திரனின் அண்ணன் விஜயேந்திரன் செப். 16ஆம் தேதி உயிரிழந்தாா். இதனால் ரவிச்சந்திரன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் அண்ணன் வீட்டுக்குச் சென்று ஒரு வாரமாக அங்கேயே தங்கினாா்.

இந்நிலையில், புதன்கிழமை அவரது வீட்டின் முன்பக்கக் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடப்பதாக ரவிச்சந்திரனுக்கு அக்கம்பக்கத்தினா் தெரிவித்தனா். இதையடுத்து ரவிச்சந்திரன் குடும்பத்தினா் வீட்டுக்கு வந்து பாா்த்தனா்.

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவில் இருந்த பூட்டுகளும், மரக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருப்பதும், உள்ளே 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பாத்திரங்கள் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பட்டீசுவரம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT