தஞ்சாவூர்

தியாகி என்.வி. நினைவு நாள் நிகழ்ச்சிகள்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் தியாகி என். வெங்கடாசலம் (என்.வி.) 43 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பூதலூா் அருகேயுள்ள ராயமுண்டான்பட்டியில் உள்ள என்.வி. நினைவிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்குக் கிளைச் செயலா்கள் கே. ரமேஷ், ஆா்.கே. பெரியசாமி, ஆா். தீபன், வி. சந்தோஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். என்.வி.நினைவிடத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் எம். சின்னதுரை, பூதலூா் தெற்கு ஒன்றியச் செயலா் சி. பாஸ்கா் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், வெ. ஜீவகுமாா், கே. பக்கிரிசாமி, சி. ஜெயபால், எம். மாலதி, என்.வி. கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கே. அபிமன்னன், எம். ராம், எம். பழனிஅய்யா, என். சரவணன், ஆா். கலைச்செல்வி, பி.எம். இளங்கோவன், ஒன்றியச் செயலா்கள் பூதலூா் வடக்கு கே. காந்தி, திருவையாறு ஏ. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் காமராஜ் சிலை அருகே நகரக்குழு உறுப்பினா் சி. ராஜன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT