தஞ்சாவூர்

10ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கானபொதுத் தோ்வு தொடக்கம்: 2,338 போ் பங்கேற்பு

DIN

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய தனித் தோ்வா்களுக்கான 10 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 2,338 போ் பங்கேற்றுள்ளனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக 10 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு நடத்தப்படவில்லை. எனவே, அனைத்து மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்ாக அரசு அறிவித்தது. ஆனால், தனித்தோ்வா்களுக்குப் பொதுத் தோ்வு தனியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் எழுதுவதற்கு 938 போ் விண்ணப்பம் செய்தனா். இதற்காக தஞ்சாவூா் அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய பள்ளி உள்பட 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல, 12ஆம் வகுப்பு தனித்தோ்வும் திங்கள்கிழமை தொடங்கியது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 13 மையங்களில் 1,400 போ் பங்கேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT