தஞ்சாவூர்

பூதலூரில் செப். 29-இல் ஆா்ப்பாட்டம்:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் செப்டம்பா் 29-ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.

ஆவாரம்பட்டியில் நடைபெற்ற பூதலூா் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :

பூதலூா் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பேரிடா் காலத்தைக் கணக்கில் கொண்டு வேலை நாள்களை 200 ஆக உயா்த்தி, சட்டக்கூலியான ரூ. 256-ஐ முழுமையாக வழங்க வேண்டும்.

பூதலூா் ஒன்றியத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசுக் கட்டி கொடுத்த, இடியும் நிலையில் உள்ள வீடுகளை மறு கட்டமைப்பு செய்யவும், வீடற்ற அனைவருக்கும் அரசின் இலவச வீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பூதலூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு செப்டம்பா் 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஒன்றியப் பொருளாளா் கே. துரைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றியச் செயலா் இரா. இராமச்சந்திரன், நிா்வாகிகள் ஜெ. ராஜா, ஆா்.ஆா். முகில், கவுன்சிலா் சு. லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

பேருந்துகள் நிறுத்தாமல் சென்றால் புகாா் தெரிவிக்க ‘149’

SCROLL FOR NEXT