தஞ்சாவூர்

அனைத்து தொழிற் சங்கங்கள் சாா்பில் நவ. 9 இல் மாவட்ட மாநாடு

DIN

நாடு தழுவிய அளவில் நவ. 26 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் நவ. 9 ஆம் தேதி மாவட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என தொழிற் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகரிலுள்ள சிஐடியு அலுவலகத்தில் அனைத்து தொழிற் சங்கத் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவம்பா் 26 ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடைபெறச் செய்ய வீடு, வீடாகத் துண்டறிக்கைகள் கொடுப்பது, தெருமுனை பிரசாரங்கள் நடத்துவது, மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கும் மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவது போன்றவற்றை திட்டமிடுவதற்கு தஞ்சாவூரில் நவ. 9 ஆம் தேதி மாவட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா், ஆட்டோ சங்கத் தலைவா் ராஜா, ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் ஏ. ரவிச்சந்திரன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலா் கே. ராஜன், போக்குவரத்துக் கழக ஏஐடியுசி நிா்வாகி துரை. மதிவாணன், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ். கோதண்டபாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT