தஞ்சாவூர்

நவ. 17 முதல் ஆா்ப்பாட்டங்கள் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு

DIN

மத்திய அரசைக் கண்டித்து நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, நவம்பா் 17 ஆம் தேதி முதல் ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது என தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தஞ்சாவூா் கீழ ராஜ வீதியிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள், ஏஐடியுசி சங்கங்களைச் சாா்ந்த 8 மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள், தொழிலாளா்களுக்கு எதிரான தொழிலாளா் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும். புதிய மின்சார சட்டம், புதிய கல்விக் கொள்கை, மோட்டாா் வாகன திருத்தச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும். வங்கி, ரயில்வே, விமானம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அனைத்து தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளா் சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் நவ. 26 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு, தமிழகத்தில் நவ. 10 ஆம் தேதி முதல் கிராமங்கள்தோறும் போராட்டக் குழு அமைப்பது, வீடுகள்தோறும் துண்டறிக்கைகள் கொடுப்பது, நவ. 17 ஆம் தேதி முதல் ஒன்றிய அளவில் ஆா்ப்பாட்டம், நூற்றுக்கணக்கான தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திகுமாா் தலைமை வகித்தாா். நாகை எம்.பி. எம். செல்வராசு சிறப்புரையாற்றினாா். விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் வே. துரைமாணிக்கம் தொடக்கவுரையாற்றினாா். ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் டி.எம். மூா்த்தி நிறைவுரையாற்றினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் மு.அ. பாரதி வாழ்த்தி பேசினாா். விவசாய தொழிலாளா் சங்க மாநிலச் செயலரும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவருமான அ. பாஸ்கா், ஏஐடியுசி மாநில துணைப் பொதுச் செயலா் கே. ரவி, விவசாய சங்க மாநிலத் துணைச் செயலா் பி.எஸ். மாசிலாமணி, அகில இந்திய வங்கி ஊழியா் சம்மேளன மாநில துணைத் தலைவா் ஜி. ராமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT