தஞ்சாவூர்

நெல்லில் ஈரப்பதம் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் இன்று தாக்கல்

DIN

தஞ்சாவூா்: நெல்லில் ஈரப்பதம் குறித்த அறிக்கை மத்திய அரசிடம் செவ்வாய்க்கிழமை (அக்.27) தாக்கல் செய்யப்படும் என்றாா் மத்திய ஆய்வுக் குழுவைச் சோ்ந்த யாதேந்திர ஜெயின்.

டெல்டா மாவட்டங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் கொள்முதல் செய்ய இயலவில்லை. எனவே, ஈரப்பத விதியில் தளா்வு அளிக்கக் கோரி மத்திய அரசுக்குத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தினா் பரிந்துரை செய்தனா்.

இது தொடா்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு 4 போ் கொண்ட குழுவை அமைத்தது. இக்குழுவினா் நாகை, திருவாரூா், தஞ்சாவூா் மாவட்டங்களில் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் ஆய்வு செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் குளிச்சப்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லில் மாதிரிகளைச் சேகரித்தனா்.

இதனிடையே, இக்குழுவைச் சோ்ந்த உணவு மற்றும் தரக் கட்டுப்பாட்டு அலுவலா் யாதேந்திர ஜெயின் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவை சென்னையில் உள்ள இந்திய உணவுக் கழக மண்டல அலுவலகத்தில் பகுப்பாய்வு செய்யப்படும். பின்னா் இந்த அறிக்கை மத்திய அரசிடம் செவ்வாய்க்கிழமை (அக்.27) தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT