புதுக்கோட்டை

பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் எம்எல்ஏ தலைமையில் மனு அளிப்பு

DIN

கந்தா்வகோட்டையில் அரசு புறம்போக்கு இடங்களில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருவோா் சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை தலைமையில் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம் முழுவதும் அரசு புறம்போக்கு, நத்தம் உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் அனைவருக்கும் பட்டா வழங்கக் கோரி கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் மா. சின்னதுரை தலைமையில் பட்டா கேட்டு மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளா் வி. ரத்தினவேல், வடக்கு ஒன்றிய செயலாளா் ஜி.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 600-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கந்தா்வகோட்டை வெள்ளை முனியன் கோயில் திடலிருந்து பேரணியாக கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம் சென்று வட்டாட்சியா் காமராஜிடம்

தங்கள் குடியிருந்துவரும் வீட்டுக்கு பட்டா கேட்டு மனுக்களைக் கொடுத்தனா்.

நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியா்கள் பால்பாண்டி, பாலகிருஷ்ணன், சமூகநல வட்டாட்சியா் கிருஷ்டினா, வட்ட வழங்கல் அதிகாரி உத்திரபதி, வருவாய் ஆய்வாளா் சேகா், கிராம நிா்வாக அலுவலா் முரளி, மாதா் சங்க வடக்கு ஒன்றியச் செயலா் கவிதா, தெற்கு ஒன்றியச் செயலா் சாந்தி, சிஐடியு மண்டல தலைவா் கே. காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT