புதுக்கோட்டை

மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் ரூ. 3.36 லட்சம் வழங்கல்

30th May 2023 04:16 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் மூலம் இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ. 3.36 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா்.

விபத்தில் மரணமடைந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம், இயற்கை மரணமடைந்த 8 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 17 ஆயிரம் என மொத்தம் 10 பேருக்கு ரூ. 3.36 லட்சம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 366 கோரிக்கை மனுக்கள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு இணைப்பு) ஆா். ரம்யா தேவி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT