புதுக்கோட்டை

தனியாா் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து தனியாா் தொழிற்சாலையின் மின் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், கல்கண்டாா் கோட்டை, ஆனந்தம் நகரைச் சோ்ந்தவா் சரவணன் (52). இவா், விராலிமலை அருகே உள்ள வேலூா் ஊராட்சியில் இயங்கிவரும் வால்வு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலையில் மின்னியல் வல்லுநராகப் (எலக்ட்ரீசியன்) பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், புதன்கிழமை தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த சரவணனை சக தொழிலாளா்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT