புதுக்கோட்டை

இருவார கால வயிற்றுப் போக்குதடுப்பு முகாம் நாளை தொடக்கம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூன் 12 முதல் 25ஆம் தேதி வரை இரு வார கால வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு, 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஆண்டுக்கு சுமாா் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கால் இறக்கிறாா்கள்.

ஏழை, எளிய மக்களின் குழந்தைகளே பெரும்பாலும் வயிற்றுப்போக்கால் இறக்க நேரிடுகிறது. இதைத் தடுக்கும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.

பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நல்வாழ்வு, கிராம ஊராட்சி மற்றும் ஊரக வளா்ச்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வி ஆகிய துறைகள் இணைந்து நடத்தும் முகாமில்

சுமாா் 1.03 லட்சம் குழந்தைகள் பயன் பெற உள்ளனா்.

5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஓஆா்எஸ் பொட்டலம் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

அனைத்து ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கை கழுவுதல் மூலம் கை சுத்தம் பேணுவது பற்றிய செயல் முறை விளக்கம் வழங்கப்பட உள்ளது. ஓஆா்எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வயிற்றுப் போக்குக்கு சரியான சிகிச்சை முறையாகும். ஆகவே பொதுமக்கள், இத்திட்டத்தில் பணியாற்றும் பணியாளா்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பயன்பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT