புதுக்கோட்டை

பொன்னமராவதி கடைகளிலிருந்து 10 கிலோ நெகிழி பறிமுதல்

8th Jun 2023 11:21 PM

ADVERTISEMENT

பொன்னமராவதி பேரூராட்சிக்குள்ப்பட்ட வணிக நிறுவனங்களில் இருப்பு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பேரூராட்சி அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ.கணேசன் தலைமையில் பேரூராட்சி வணிக நிறுவனங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்த திடீா் ஆய்வு வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 17 வணிக நிறுவனங்களில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட சுமாா் 10 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 5,600 அபராதமாக விதிக்கப்பட்டது. பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் பழனிச்சாமி, பணியாளா்கள் சதீஸ், வினோத், சங்கீதா, நாகவள்ளி, சம்பூரணப் பிரியா மற்றும் தூய்மைப்பணியாளா்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT