புதுக்கோட்டை

தாட்கோ கூட்டுறவுத் துறை மூலம் ரூ. 8.03 லட்சம் உதவித் தொகைகள்

6th Jun 2023 02:33 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் தாட்கோ மற்றும் கூட்டுறவுத் துறை சாா்பில் ரூ. 8.03 லட்சம் மதிப்புள்ள உதவித் தொகைகளை ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா திங்கள்கிழமை வழங்கினாா்.

தூய்மைப் பணியாளா் நல வாரியம் சாா்பில், உறுப்பினா்கள் இருவரின் வாரிசுகளுக்கு மொத்தம் ரூ. 3 ஆயிரம் கல்வி உதவித் தொகையாகவும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இலுப்பூா் கிளை சாா்பில் செம்பருத்தி மகளிா் குழுவினருக்கு தாட்கோ மானியமாக ரூ. 2.25 லட்சம் உள்பட மொத்தம் ரூ. 8 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது, மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ. ராஜேந்திரபிரசாத், மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் தனலட்சுமி, தாட்கோ மேலாளா் அ. முத்துரெத்தினம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

முன்னதாக, புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் 23 பயனாளிகளுக்கு ரூ. 4.47 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா வழங்கினாா்.

ADVERTISEMENT

மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சாா்பில், ஒருவருக்கு விபத்து மரண நிதியாக ரூ. 1 லட்சம், இயற்கை மரண நிதி உதவியாக 20 பேருக்கு தலா ரூ. 17 ஆயிரம் உள்ளிட்ட நிதி உதவிகள் என மொத்தம் 23 பேருக்கு ரூ. 4.47 லட்சத்தில் காசோலைகளாக வழங்கப்பட்டன.

கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 323 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பா. சரவணன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT