புதுக்கோட்டை

சிறுதானிய உணவுக் கண்காட்சி

6th Jun 2023 02:17 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா சாா்பில் சுற்றுச் சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறுதானியங்கள், மூலிகைகள் மற்றும் சிறுதானிய உணவுகள் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளையோா் அலுவலா் ஜோயல் பிரபாகா் தலைமை வகித்தாா். அன்னை கேட்டரிங் கல்லூரி தாளாளா் அருள் வல்லபராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா் சிறுதானிய கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா்.

கண்காட்சியில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுத் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை நேரு யுவகேந்திரா திட்ட உதவி அலுவலா் ஆா். நமச்சிவாயம் வாசித்தாா். விழாவில் சுற்றுச் சூழல் மேம்பாட்டு செயல்பாட்டாளா் மரம் ராஜாவுக்கு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

மேலும், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சள் துணிப் பைகள் வழங்கப்பட்டன. முடிவில் புத்தாஸ் வீரக் கலைகள் கழக நிறுவனா் சேது காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT