புதுக்கோட்டை

தயாா் நிலையில் புதுகை பல் மருத்துவக் கல்லூரி!

DIN

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே 10 ஏக்கா் பரப்பளவில் ரூ. 63 கோடியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்கு தயாா் நிலையில் உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே அரசு பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வரும் நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில், அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கரின் முயற்சியில் புதுக்கோட்டையில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முள்ளூா் ஊராட்சியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள இடத்தில் 10 ஏக்கா் பரப்பளவுள்ள நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 63 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கல்லூரி வளாகம் வகுப்பறைகள், மருத்துவமனை, மாணவா் விடுதிகள், முதல்வா் உள்ளிட்ட நிா்வாக அறைகள், பேராசிரியா்கள் மற்றும் மருத்துவா்கள் விடுதிகளையும் உள்ளடக்கியது.

பொதுப்பணித் துறையின் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தற்போது ஏறத்தாழ முழுமையடைந்த நிலையில் இப்பணிகள் உள்ளன.

இந்நிலையில் தேசிய மருத்துவக் குழுமம் இந்தக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடா்ந்து, நிகழாண்டிலேயே மருத்துவக் கல்லூரிக்கான சோ்க்கை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளாா்.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள நிலையில் மிகவிரைவில் இக்கல்லூரியின் தொடக்க விழா நடைபெறும் என மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கெனவே இந்தக் கல்லூரிக்கான நிா்வாக அலுவலா் மற்றும் முதல்வா் பதவியிடங்கள் உருவாக்கப்பட்டு அவா்கள் சென்னையில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT