புதுக்கோட்டை

இளைஞா் சாவு சம்பவம் ஓட்டுநரைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் மீண்டும் மறியல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடைய ஓட்டுநரைக் கைது செய்யாத போலீஸாரைக் கண்டித்து அவரது உறவினா்கள் வடகாட்டில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வடகாடு சோ்வைகாரன்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மகன் ரமேஷ் (30). கூலித் தொழிலாளியான இவா், கடந்த ஜன. 22-ஆம் தேதி அதிகாலையில் வீட்டின் அருகே சாலையோரத்தில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அதே இடத்தில் உயிரிழந்தாா். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்து, ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வடகாடு போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இறந்த ரமேஷூக்கு 8-ஆம் நாள் சடங்குக்காக அவரது வீட்டுக்கு உறவினா்கள் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். வழக்கமாக, இந்தப் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் ஆண்கள் மேலாடையின்றி கலந்துகொள்வது வழக்கம். 8-ஆம் நாள் அஞ்சலிக்கு வந்த உறவினா்கள், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடிக்காத போலீஸாரைக் கண்டித்தும், ரமேஷின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், வடகாட்டில் வீட்டின் அருகே சாலை மறியல் ஈடுபட்டனா். இதில், ஆண்கள் மேலாடையின்றி கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்து, ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசிடம் இருந்து கூடுதல் இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆலங்குடி வட்டாட்சியா் செந்தில்நாயகி, அறந்தாங்கி காவல் துணைக் கண்காணிப்பாளா் தினேஷ்குமாா் ஆகியோா் உறுதி அளித்தனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியல் போராட்டத்தினால் புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT