புதுக்கோட்டை

சங்கம்விடுதி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு

DIN

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு சங்கம்விடுதி ஊராட்சி மன்ற தலைவா் என்.பெருமாள் தலைமை வகித்தாா். நடமாடும் மருத்துவக் குழு மருத்துவா் சசிவா்மன் தலைமையிலான மருத்துவக்குழுவினா் கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்தனா். முகாமில், டெங்கு காய்ச்சல் ஆய்வு, கிராம சுகாதரம் பேணல், கிருமி நாசினி தெளித்தல், டெங்கு கொசுப்புழு ஒழித்தல் மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கக் குடிநீா் தொட்டி சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடா்ந்து, கிராம மக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. முகாமில், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, ஊராட்சிச் செயலா் கே. காளிமுத்து, எம்.டி.எம். சுகாதார ஆய்வாளா் தமிழ்வாணன் மற்றும் கிராம தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT