புதுக்கோட்டை

புதுக்கோட்டை கல்வி நிலையங்களில் குடியரசு தினம்

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் கல்வி நிறுவனங்களில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அறந்தாங்கி அரசுக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், கல்லூரியின் முதல்வா் (பொ) தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா்.

புதுக்கோட்டை சுதா்சன் கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி நிா்வாக இயக்குநா் இரா.ரமாசிங்காரம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் சிங்காரம் முன்னிலை வகித்தாா். விழாவில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் தாமரைச்செல்வன் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். பொம்மாடிமலை பொன்மாரி கல்வியியல் கல்லூரியில், ஓய்வுபெற்ற பேராசிரியா் விஸ்நாதன் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். கல்லூரிச்செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வா் முனைவா் குழ.முத்துராமு வரவேற்றாா். செயலா் மு.விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் தேசியக் கொடி ஏற்றி வைத்தாா்.

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஆலோசகா் அஞ்சலிதேவிதங்கம் மூா்த்தி தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். மேலாண்மை இயக்குநா் நிவேதிதா மூா்த்தி, பள்ளியின் முதல்வா் கவிஞா்தங்கம்மூா்த்தி உள்ளிட்டோா் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

இதேபோல், மாவட்டத்தின் அனைத்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களில் தேசியக்கொடியை அதிகாரிகள் ஏற்றிவைத்து குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT