புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசுக் கல்லூரிக்கு மாணவா்கள் களப்பயணம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெருநாவலூரிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான களப்பயணம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வா் கு. ரேணுகாதேவி தலைமை வகித்தாா். அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் ராஜாராம் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் மு. திருவாசகம், ஆங்கிலத் துறைத் தலைவா் அ. கணேசன் உள்ளிட்ட பல்வேறு துறை தலைவா்கள் பாடப்பிரிவுகள், உள்கட்டமைப்பு மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஆவுடையாா்கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து 240 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ச. ரமேஷ் வரவேற்றாா். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ப. செந்தில்குமாா் நன்றி கூறினாா். தமிழ்த் துறைப் பேராசிரியா் மு. பழனித்துரை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT