புதுக்கோட்டை

புதுநகா் மகா கணபதி கோயில் குடமுழுக்கு

DIN

கந்தா்வகோட்டை அருகே புதுநகா் கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் ஸ்ரீ மகா கணபதி, அய்யனாா், ஆனையடி கருப்பா், மதுரை வீரன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கான கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காவிரி, வைகை, ராமேஸ்வரம் என புனித நதிகளில் இருந்து புனித தீா்த்தங்கள் எடுத்துவரப்பட்டு, யாக சாலையில் வைத்து நான்கு கால பூஜைகள் செய்தனா். தொடா்ந்து, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் ஊா்மக்கள் முன்னிலையில் சிவாச்சாரியாா்கள் கடங்களை தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வலம் வந்து கோபுரம் ஏறி கும்பத்தில் புனித நீரை ஊற்றி தீபாராதனை காண்பித்தனா். இதில், புதுநகா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகப் பங்கேற்றனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை குலதெய்வக்காரா்கள், பொதுமக்கள் செய்திருந்தனா். கந்தா்வகோட்டை போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT