புதுக்கோட்டை

விவசாயத் தொழிலாளா்களின் கூலியை ரூ. 600-ஆக நிா்ணயிக்கக் கோரிக்கை

DIN

கேரளத்தைப் போல தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளா்களின் குறைந்தபட்ச கூலியாக ரூ. 600-ஐ நிா்ணயம் செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு புதுக்கோட்டையில் பிப். 4 -இல் தொடங்கி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. திருவாரூரில் இருந்து கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடியை சங்கத்தின் முதல் மாநில பொதுச் செயலா் பெரி. குமாரவேல் ஏற்றிவைத்தாா்.

நாவலன் நினைவு ஜோதியை அகில இந்தியத் தலைவா் ஏ. விஜயராகவன், வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதியை அகில இந்தியப் பொதுச் செயலா் பி. வெங்கட், திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு ஜோதியை மாநிலத் தலைவா் ஏ.லாசா், பி. சீனிவாசராவ் நினைவு ஜோதியை மாநிலப் பொதுச் செயலா் வீ. அமிா்தலிங்கம், திருச்சி கே.செல்லம்மாள் நினைவு ஜோதியை மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா், தேனி எஸ். மொக்கராஜ் நினைவு ஜோதியை மாநிலச் செயலா் எம். சின்னதுரை எம்எல்ஏ, தஞ்சை தியாகி என். வெங்கடாசலம் நினைவு ஜோதியை மாநிலத் துணைத் தலைவா் பி. வசந்தாமணி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் ஏ. லாசா் தலைமை வகித்தாா்.

மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்தியத் தலைவா் ஏ. விஜயராகவன் பேசினாா்.

வேலை அறிக்கையை மாநிலப் பொதுச் செயலா் வீ. அமிா்தலிங்கம், வரவு- செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் ஆகியோா் முன்வைத்தனா். மாநாட்டை வாழ்த்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் அ. பாஸ்கா் பேசினாா்.

மாநாட்டில், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் கோடி நிதி ஒதுக்கி, ஆண்டு வேலைநாள்களை 200-ஆகவும், விவசாயத் தொழிலாளா்களுக்கான கூலியை ரூ. 600-ஆகவும் உயா்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் தொடர வேண்டும். கொள்ளையடிக்கும் நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதோடு, சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். ஊரக தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம், சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும், குமரி சூழலியல் அதிா்வு தாங்கு மண்டலத் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, வரவேற்புக் குழுத் தலைவா் எம். சின்னதுரை எம்எல்ஏ., வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

அதிசயக் கோயில்!

சிகிச்சையிலிருந்து நேரடியாக வாக்களிக்க வருகை: இன்ஃபோசிஸ் நிறுவனர் ஒரு முன்னுதாரணம்!

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

SCROLL FOR NEXT