புதுக்கோட்டை

விராலிமலை கோயில் தேரோட்டம்: முகூா்த்தக் கால் நடும் விழா

DIN

விராலிமலை முருகன் கோயில் தேரோட்ட விழாவின் தொடக்கமாக முகூா்த்தக் கால் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விராலிமலை முருகன் மலைக்கோயில் தைப்பூச விழா கொடியேற்றம் மலைக்கோயில் சன்னதி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கடந்த ஜன. 27 ஆம் தேதி மங்கள வாத்தியங்கள் இசைத்து வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் ஓம் எழுத்து பொறிக்கப்பட்ட கொடியை கொடிமரத்தில் ஏற்றிவைத்து விழாவைத் தொடங்கிவைத்தனா். இதனைத் தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் பிப். 4 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. தேரோட்ட விழாவின் தொடக்க நிகழ்வான முகூா்த்தக் கால் நடும் விழா தேரில் முருகன் எழுந்தருளும் மையத்தில் நடைபெற்றது.

இதில், தோ் வடிவமைப்பாளா் இருந்திராப்பட்டி தச்சா் காமாட்சி, விழாக்குழுவைச் சோ்ந்த அபூா்வா பாஸ்கா், கோயில் ஊழியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT