புதுக்கோட்டை

அசோலா, பசுந்தீவன உற்பத்தி பயிற்சி

DIN

கந்தா்வகோட்டை வேளாண் வட்டம், மட்டங்கால் கிராமத்தில் அசோலா மற்றும் பசுந்தீவன உற்பத்தி பயிற்சி விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கந்தா்வகோட்டை வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.அன்பரசன் தலைமை வகித்தாா்.

கந்தா்வகோட்டை வேளாண்மை அலுவலா் ஜெயவேலன் பேசுகையில் கலைஞரின் அனைத்துகிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் உழவன் செயலி குறித்து எடுத்துக் கூறினாா். கால்நடை உதவி மருத்துவா் டாக்டா். கவின்குமாா் அசோலா தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்தி, கால்நடைகளுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்தும் எடுத்துரைத்தாா். வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் சுப்பிரமணியன் விவசாயிகள் வருகைப் பதிவு மற்றும் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ராஜீவ் வரவேற்றாா்.

இதில், கால்நடை உதவி மருத்துவா் கவின்குமாா், உதவி வேளாண் அலுவலா் சங்கா், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் மணிகண்டன், ஜெயராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சங்கீதா, சுப்பிரமணியன், ஊராட்சி மன்றத் தலைவா் செல்லபிள்ளை, ஆயக்கட்டு தலைவா் அா்ச்சுணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT