புதுக்கோட்டை

ஆசிரியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25th Apr 2023 01:34 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாலை செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் சங்கா், மாநில அமைப்புச் செயலா் சுரேஷ், மாநிலப் பொது செயலா் ப. தமிழ்மணியன் உள்ளிட்டோரும் பேசினா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும். தலைமை ஆசிரியா் பதவி உயா்வின்போது, பதவி உயா்வு பெற்ற பட்டதாரி ஆசிரியா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஆசிரியா் பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT