புதுக்கோட்டை

காந்தியடிகளின் பிறந்த நாள் விழா: அக். 12-இல் பேச்சுப்போட்டி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அனைத்துவகை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு வரும் அக். 12ஆம் தேதி புதன்கிழமை பேச்சுப் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு மேலும் கூறியது:

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு

ADVERTISEMENT

புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளி மாணவா்களுக்கான போட்டிக்கு, அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, மற்றும் பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய 4 தலைப்புகளும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிக்கு, வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம் மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே மற்றும் இமயம் முதல் குமரி வரை ஆகிய 6 தலைப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்படுவா்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை நேரில் தொடா்பு கொள்ளவும். 99443 12236 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT