புதுக்கோட்டை

மயானச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் ஆதிதிராவிடா் மயானச் சாலையை சீரமைத்து, தாா்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.

சுப்பிரமணியபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விஜயபுரம் சின்ன கடைவீதியில் எரியாமல் உள்ள உயா்மின் கோபுர விளக்குகளை பழுதுபாா்த்து எரிய வைக்க வேண்டும். சுப்பிரமணியபுரம் வெள்ளிச்சந்தை சாலை மற்றும் ஆற்றங்கரை சாலையைச் சீரமைக்க வேண்டும். சுப்பிரமணியபுரம் கற்பூரணி குளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் படித்துறை அமைக்க வேண்டும். விஜயபுரம் வடக்குப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, பன்னீா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT