புதுக்கோட்டை

வேளாண்மை வளா்ச்சி திட்டபயனாளிகளுக்கு உதவிகள்

24th May 2022 04:21 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கல்லாக்கோட்டையில் உழவா் நலத்துறை சாா்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் சாா்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டம் தொடக்க விழா கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் மா.சின்னத்துரை தலைமை வகித்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், வட்டாட்சியா் சி.புவியரசன், ஒன்றியக்குழு தலைவா் ஆா்.ரத்தினவேல்காா்த்திக், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நா. ஸ்டாலின், வேளாண்மை உதவி இயக்குநா் க. அன்பரசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திலகவதி, ஸ்ரீதரன், கல்லாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் பவுன்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் சுதா ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT