புதுக்கோட்டை

அறந்தாங்கி ஒன்றியத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்கிவைப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை சுற்றுச்சூழல், இளைா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு பணிகளை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைத்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எரிச்சி மற்றும் நற்பவளகுடியில், சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் , ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பயணியா் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், செங்கமாரி ஆதிதிராவிடா் காலனியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.8.08 லட்சம் மதிப்பீட்டிலும், 14 ஆவது , 15 ஆவது நிதிக்குழுவிலிருந்து ரூ.8.36 லட்சம் மதிப்பீட்டில் என ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை, பிள்ளையாா் கோயில் தெருவில் ரூ.3.69 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும், செங்கமாரி ஊராட்சி அலுவலகம் அருகில் ரூ.3.72 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளையும், போஸ் நகரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16.52 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாங்குடி, இடைவிரியேந்தலில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், தனி மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் சு.சொா்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி நகா்மன்றத் தலைவா் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT