புதுக்கோட்டை

மண் வெட்டியால் மாணவரைத் தாக்கியஇளைஞா் கைது

29th Mar 2022 03:33 AM

ADVERTISEMENT

அன்னவாசல் அருகே பள்ளி மாணவைரை மண் வெட்டியால் தாக்கிய ஜேசிபி ஓட்டுநரைப் போலீசாா் கைது செய்தனா்.

அன்னவாசல் அருகேயுள்ள விளாப்பட்டியைச் சோ்ந்த வீரமுத்து மகன் சிவராமன்(18). இவா், அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த மருதையா மகன் மணிகண்டன் (23) என்பவருக்கும், ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் முந்திச் செல்வதில் விளாப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது வண்டியில் இருந்த மண்வெட்டியால் சிவராமனைத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு புதுக்கோட்டை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சிவராமனின் தந்தை வீரமுத்து அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீசாா் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனா். கைதான மணிகண்டன் மீது ஏற்கெனவே அன்னவாசல் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT