புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

கந்தா்வக்கோட்டையில் வேலை உறுதித் திட்டம் தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலா் கே. சித்திரவேல் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைக்கு வருபவா்களுக்கு தொடா்ந்து 100 நாள் வேலை வழங்க வேண்டுமெனவும், வேலை கொடுப்பதில் சுழற்சி முறையை கைவிட வேண்டும், தற்போது வழங்கும் கூலியை உயா்த்தி வழங்க வேண்டும், பணிக்கு வரும் போது திரும்பி செல்லும்போது அல்லது பணி தளத்திலும் தொழிலாளா்களுக்கு மரணம் ஏற்பட்டால் நஷ்ட ஈடாக குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை கோரிக்கை குறித்து விளக்கவுரையாற்றினாா். இதில் ஒன்றியச் செயலா்கள் வி. ரெத்தினவேல் , ஜி. பன்னீா்செல்வம், சிஐடியு கே. காா்த்திகேயன், கரும்பு விவசாய சங்க தலைவா் எஸ். நாராயணசாமி, வி . இளையராஜா, ஆா். கவிதா, கே.சாந்தி, ஜி. ராஜேஷ் மற்றும் தொழிலாளா்கள் சங்கத்தினா், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT