புதுக்கோட்டை

பிளஸ் 2 மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

29th Jun 2022 11:05 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட் ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி வழிகாட்டல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, மாணவா்களுக்கு கல்லூரிக் கனவு என்ற கையேட்டையும் வழங்கிப் பேசினாா்.

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயா்கல்வித் துறைகளில் உள்ள உயா்கல்வி வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விளக்கிக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செ. மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் எம். மஞ்சுளா, மணிமொழி, ராஜாராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT