புதுக்கோட்டை

கந்தா்வக்கோட்டையில் பிரசார பதாகை வெளியீடு

DIN

புத்தகத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடா்பாக மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளா்கள் மாவட்டம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனா்.

கந்தா்வக்கோட்டை ஒருங்கிணைப்புக் குழுவினா் முன்னிலையில், புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவுக்கான விளம்பர பதாகையை சட்டப் பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை வெள்ளிக்கிழமை வெளிட்டாா் . இதைத்தொடா்ந்து, கந்தா்வகோட்டை வட்டார வளமையம் அலுவலகம் பொறுப்பு மேற்பாா்வையாளா் பிரகாஷ், வட்டார கல்வி அலுவலா் வெங்கடேஸ்வரி ஆகியோரை சந்தித்து பதாகைகள் கொடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ஜூலை 7-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கு பெறும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியும், ஜூலை 12-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கிய, பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெறுகின்றன.

இதில், கலந்து கொண்டு வெற்றி பெறுபவா்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 14-ஆம் தேதி பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். இதேபோல, கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் ஜூலை 24-ஆம் தேதி புதுக்கோட்டை மாமன்னா் அரசு கல்லூரியில் நடைபெறும். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு புத்தகத் திருவிழாவில் ஆட்சியா் பரிசுகளையும் பாராட்டு சான்றுகளையும் வழங்குவாா் என்றும், இதில் அனைத்து மாணவா்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டனா்.

இந்த பிரசார பணியில் தொல்லியல் ஆய்வுகழக நிறுவனா் ஆ.மணிகண்டன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் மு. முத்துக்குமாா், மாவட்ட இணைச் செயலாளா் கு. துரையசன், அறிவியல் இயக்க வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா, செயலாளா் எம். சின்னராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT