புதுக்கோட்டை

சிறப்பு ஒதுக்கீடு: எம்.பி.பி.எஸ் பயிலும் மேற்பனைக்காடு அரசுப் பள்ளி மாணவி

28th Jan 2022 05:32 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு அரசுப்பள்ளியில் பயின்ற மாணவிக்கு மாற்றுத்திறனாளி சிறப்பு ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஷம்ஷியா அப்ரின். இவா், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் மூலம் எம்பிபிஎஸ் பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியைத் தோ்வு செய்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT