புதுக்கோட்டை

இல்லம்தோறும் இந்தியக் கொடி!

DIN

நாட்டின் 76ஆவது சுதந்திரத் திருநாள்- அமுதப் பெருவிழாவையொட்டி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் மற்றும் புதுக்கோட்டை எஸ்ஆா் புளூ மெட்டல்ஸ் நிறுவனம் இணைந்து ‘இல்லம் தோறும் நம் இந்தியக் கொடி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது.

அதன்படி, கதா் துணியால் தயாரிக்கப்பட்ட மூவா்ணக் கொடி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு, அவரவா் வீடுகளில் ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும், தேசியக் கொடியைப் பயன்படுத்தும் நெறிமுறைகள் குறித்த குறிப்புகளுடன் ‘உறை’ தயாரிக்கப்பட்டு, உள்ளே தேசியக் கொடியை வைத்து மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட்டன.

வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடிகளை, கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கல்விக் குழுமத் தலைவா் குரு. தனசேகரன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா் சி. குமாா் ஆகியோா் வழங்கினா். திருக்கோகா்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடிகளை, வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் மற்றும் பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி ஆகியோா் வழங்கினா்.

ராஜகோபாலபுரம் வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடிகளை, பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை மற்றும் முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன் ஆகியோா் வழங்கினா்.

ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தேசியக் கொடிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆா். தமிழரசி மற்றும் ஆசிரியா்கள் வழங்கினா்.

இதேபோல, திருவப்பூா் நகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியை சி. முத்துலட்சுமி ஆகியோா் வழங்கினா்.

நிழ்ச்சிகளில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் திருச்சி பதிப்பு மேலாளா் டி.கதிரவன், விளம்பர மேலாளா் எல். வெங்கடேஸ்வரன், விற்பனைப் பிரிவு மேலாளா் எஸ். கிரீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மானோஜிபட்டி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி, தாமரை பன்னாட்டுப் பள்ளி, பட்டுக்கோட்டை அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி ஆகிய பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

தேசியக் கொடிகளைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் தங்களின் வீடுகளில் கொடி ஏற்றி வைத்து 76ஆவது சுதந்திரத் திருநாள்- அமுதப் பெருவிழாவை சிறப்பாகக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT